விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற சௌந்தர்ராஜா-தமன்னா ஜோடி!

Published:

soundarraja met vijayakanth - 2026
விஜயகாந்திடம் வாழ்த்துப் பெற்றதில் மெத்த மகிழ்ச்சி என்று நடிகர் சௌந்தரராஜா தமன்னா தம்பதி தெரிவித்துள்ளனர்.

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் அண்மையில் நடைபெற்றது. இருவரும் இன்று தம்பதியராக தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து  நடிகர்  சௌந்தரராஜா கூறுகையில் தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப் பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவு கூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய புரட்சிக்கலைஞருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img