வைரலாகும் ‘சாப்பாட்டு’ விஜய் பிக்சர்ஸ்…!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

vijay picture sarkar - 2026

நடிகர் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் ஆடியோ வெளியீடு தற்போதுதான் முடிந்துள்ளது.

வழக்கம் போல், படத்தின் ப்ரமோஷனுக்காக கொஞ்சமாக அரசியல் தடவாமல்… முழு நேர அரசியலே பேசி முதல்வர் ரேஞ்சுக்கு கனவெல்லாம் கண்டு விட்டார் விஜய். படத்தைத் தயாரித்த சன் பேனரின் வாரிசுகளும் அதே கனவில் மிதந்து கொண்டிருக்க… விஜய்யின் பேச்சு அனைத்து அரசியல் மட்டத்திலும் விமர்சனங்களைக் கிளப்பியது.

இப்படி சூடு கிளப்பி விட்டுள்ள நிலையில், அரசியல் கருத்துகளுடன் தீபாவளிக்கு சர்கார் வெளிவருகிறது.

சர்க்கார் முடித்த கையுடன் அடுத்து அட்லியின் படத்தில் கமிட் ஆகி, அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்காத நிலையில் குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் விஜய்.

அதன் ஒரு பகுதியாக, விஜய் வெளியூரில்  ஓர் உணவகத்தில் தனது மகளுடன் உணவருந்தும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.