கிறிஸ் கெய்லுக்கு கௌரவம் அளித்த மேற்கு இந்திய தீவுகள் அணி!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

Chris Gayle celebration - 2026

உலகக் கோப்பைக்கான மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்தில் நடக்கும் இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி, அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதில், ஐபிஎல் தொடரில் மிரட்டும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல், 39 வயதான கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கெய்லுக்கு இது 5-வது உலக கோப்பை போட்டி.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணிக்கு அவரை துணை கேப்டனாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இது கிறிஸ் கெயிலுக்கு அளிக்கப் படும் ஒரு கௌரவமாகவே பார்க்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.