தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்

Published:

Dhyanamum Anmiga Vazhkaiyum 2 Volumes set1 - 2026

தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்

  • 🔖 சுவாமி யதீஸ்வரானந்தர் எழுதிய Meditation and Spiritual Life என்ற நூலின் தமிழாக்கம் (மொழியாக்கம்: சுவாமி ஸுப்ரக்ஞானந்தர்)
  • 🔖 1118 பக்கங்கள், 2 பாகங்கள்
  • 🔖 விலை: 1000 RS. 500.00
    https://istore.chennaimath.org/product/dhyanamum-anmiga-vazhkaiyum-tamil/

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வர் சுவாமி பிரம்மானந்தரின் சீடர் சுவாமி யதீஸ்வரானந்தர். அவர் ராமகிருஷ்ண இயக்கத்தின் பெருமதிப்பிற்குரிய தவமிகு துறவி. ராமகிருஷ்ண மடம் – மிஷனின் துணைத் தலைவராக விளங்கி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பக்தர்களுக்கு தீக்ஷை அளித்து அவர்களது ஆன்மீக வாழ்க்கையைத் துலங்கச் செய்தவர்.

ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்த சுவாமிகள் தியானம், தியானத்தின்போது வரும் தடைகள், அவற்றை விலக்கும் வழிகள், மனதின் இயல்புகள், அதனை வெற்றிகொள்ளும் வழிகள், இறைவனின் உருவ, அருவ தியானம் போன்ற பல விஷயங்களை ஆழமாக, தெளிவாக, எளிமையாக, விரிவாக இந்த நூலில் விளக்கியுள்ளார்.

மனோதத்துவத்தையும் கடவுள் தத்துவத்தையும் அனுபவ அறிவுடன் கற்ற சுவாமி யதீஸ்வரானந்தரின் இந்த நூல் ஆன்மீகச் சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் ஓர் அற்புதமான வழிகாட்டி. Meditation And Spiritual Life என்ற நூலை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் சுவாமி ஸுப்ரக்ஞானந்தர் மொழியாக்கம் செய்துள்ளார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

1118 பக்கங்கள் கொண்ட ரூ.1000/- மதிப்புள்ள இந்த இரு நூல்களை ரூ.500/-க்கே வழங்குகிறார்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img