November 8, 2024, 9:39 PM
28.3 C
Chennai

தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டில் தமிழும் சம்ஸ்க்ருதமும்: இணைய வழி கருத்தரங்கு!

தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தமிழும் சமஸ்கிருதமும் என்ற தலைப்பில் சம்ஸ்க்ருத பாரதி (வட தமிழகம்) அமைப்பின் சார்பில் 2 நாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறுகிறது. மார்ச் 6 மற்றும் 7 இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த நிகழ்ச்சி யூடியூப் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, பூஜ்யஸ்ரீ ஓங்காரநந்த சுவாமிகள், சம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர் ஆர் ராமச்சந்திரன், பேராசிரியர் கோபபந்து மிஸ்ரா (சம்ஸ்க்ருத பாரதி தலைவர்) ஆகியோர் உரையாற்றுகின்றனர்

இன்றைய நிகழ்வில் விசார தரங்கிணி என்ற கருத்தரங்கு சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. இதில் சிறப்புரை நிகழ்த்துகிறார் சாலமன் பாப்பையா. இன்றைய முதல் அமர்வில் தமிழ்த் துறை பேராசிரியர் ஜெகநாதன் உரையாற்றுகிறார். இரண்டாவது அமர்வில் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் சம்ஸ்க்ருத துறை சார்ந்த டாக்டர் கணேஷ் மற்றும் மூன்றாவது அமர்வில் சமஸ்கிருத துறையை சேர்ந்த டாக்டர் எஸ் ஜெகதீசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்

ALSO READ:  செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

7ஆம் தேதி நாளை விசார தரங்கினி கருத்தரங்கு சிறப்பு மலர் 2 வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் முதல் அமர்வில் டாக்டர் சி சதானந்தன் (டி ஜி வைஷ்ணவா கல்லூரியின் தமிழ்த்துறை) உரையாற்றுகிறார். இரண்டாவது அமர்வில் ராணிமேரி கல்லூரியின் தமிழ்த்துறை டாக்டர் அனுராதா உரையாற்றுகிறார் மூன்றாவது அமர்வில் ஜகத்குரு க்ருபாளு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர் ராமரத்தினம் உரையாற்றுகிறார்

மேலும் இன்றைய சிறப்பாக உச்சநீதிமன்ற நீதிபதி வி ராமசுப்பிரமணியம் சிறப்புரை நிகழ்த்துகிறார் இந்த சம்ஸ்கிருத நிகழ்ச்சியில் அனைத்திந்திய சமஸ்கிருத பாரதி தலைவரும் ஸ்ரீ சோமநாத சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் கோபபந்து மிஸ்ரா சம்ஸ்கிருதத்தில் உரை நிகழ்த்துகிறார்.