மாநிலம் காக்கின்ற பெண்ணே …!

Published:

women day 1 - 2026

மண்மேலே உயிர்களை தோற்றுவிக்கும்
மாதாவாய் உன் பிறப்பு மகத்துவம் நிறைந்தது..
மங்கையராய் பிறப்பெடுத்து
மாநிலம் காக்கின்ற பெண்ணே
உன் பிறப்பு தனித்துவம் பெற்றது..

தாயாய் என் உயிருக்கு பிறவி தந்தவள்.
தமக்கையாய் தங்கையாய் உடன் பிறந்தவள்
தன்னில் பாதியாய் மனைவியானவள்
தன்னின் உருவமாய் மகளாய் தோன்றியவள்..

இப்படி எங்கும் பெண்ணாக
இறைவியின் வடிவமாக
எல்லா உயிர்களையும் இயக்குபவள் நீ..
இன்பத்தின் முழு வடிவமாய் வாழ்பவள் நீ

பெண்மை என்பது தியாகத்தின் முழு வடிவம்
பூமி மீது வாழும் சக்தியின் திருவடிவம்..
உன்னை போற்றுகிறோம் இந்நாளில்
உலக மகளிர் தினமான இப்பொன்நாளில்..

பெண்மையே வாழ்வில் முழுமை..
பெண்மையை காப்பதே ஆண்மையின் பெருமை..
அதை உணராதவரும் உணர வேண்டும் வாழ்நாளில்.. பெண்மையே உனைப் போற்றி வணங்குகிறோம் இந்நாளில்.!

ஆக்கம் – கா. விஜய பாரதி
(தமிழாசிரியர், விவேகானந்தா வித்யாலயா, ஜோதிநகர்)

Related articles

Recent articles

spot_img