சாவர்க்கர் உயிர்ப்பு கொடுத்த… சத்திய சித்தாந்தம்!

Published:

Vinayak Damodar Savarkar
Vinayak Damodar Savarkar

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியையே
சாதி பார்த்து ஒதுக்கிய இந்தக் கயவர்கள்,
உன்னை ஒதுக்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்!

சொத்தை இழந்து,
சொந்தங்களை இழந்து
உடல்நலம் சீர்கெட்டு,
சித்திரவதைகள் என்னவெல்லாம் உண்டோ
அதை எல்லாம் சிறையில் அனுபவித்து……

savarkar vd 1
savarkar vd 1

எங்களுக்காய்,
இந்த மண்ணின் சுதந்திரத்திற்காய்
தன்னை அழித்து
தாய் மண்ணைக்காத்த உன்னை
“இந்திய சிந்தாத்ததிற்கு” உயிர்ப்பு கொடுத்தாய் என்ற
ஒரே காரணத்திற்காக ….

அன்னிய நாட்டு சித்தாந்த அடிவருடிகள்
புழுதி வாரித் தூற்றுகின்றனர்..

கம்யூனிசம் பேசினார் என எந்த இந்துத்துவவாதியும்
பகத்சிங்கைத் திட்டவில்லை….
நம்முள் ஒருவனாய் நாம் கண்டோம்…
அதுதான் நம் நாட்டுப்பற்று …!

ஆனால்…
ஒரு உச்சபட்ச தியாகியை அவமதித்துப் பேசும் உங்களுக்கு
ஏதடா நாட்டுப்பற்று….?!
சீச்சீ… நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு?!

அதுசரி…
சித்தாந்தத்திற்கே அந்நிய நாட்டை அண்டிப் பிழைக்கும் கயவர்களே
உங்கள் அடிமை வாயினால் அந்த மகானை
ஏத்திப் பேசினால் அதுவே அன்றோ அவருக்கு அவமானம் !?

அன்று அந்த அந்நியன் தூற்றினான் ….
இன்று அவன் அடிவருடிகள் தூற்றுகிறார்கள்….

இவர்கள்…
என்ன தான் முயன்றாலும்…
என்றுமே அழியாது
அவன் மறு உயிர்ப்பு கொடுத்த
இந்திய சித்தாந்தம் – இந்துத்துவம்!

வீர சாவர்க்கர் !

இன்று பிறந்த நாள் !
பெருமை கொள்கிறோம் !

  • அ.அஸ்வத்தாமன் , பாஜக

Related articles

Recent articles

spot_img