வெங்காயமும் உருளையும் வெளுத்துக் கட்டுவாள் உன்னவள்… சொல்லி வைத்தாள் தோழி..! உனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்ததாய் உருவகித்துக் கொண்டேன்! அறிவில் நீயிருக்க… அரிவாள்மனை முன்னிருக்க… காய் நறுக்கி வந்தேன்.. கவனத்தில் நீ! கை நறுக்கிக் கொண்டேன்! துடித்துப் போனது நீ நிறைந்திருந்த என் இதயம் ! துடிப்பின் வீரியத்தை உடனே கொட்டிய ரத்தநீர் உணர்த்திக் காட்டியது! உன்மேல் உறைந்திருந்தது சிந்தனை! என்மேல் உறையாதிருந்தது சிவந்தநீர்! நினைவிழப்பு நிகழவில்லை! நினைவில் நீயே நிறைந்திருந்ததால்!
Published:

