தில்லியில் இன்று 11 மணிக்கு அனைத்துக் கட்சியினருடனும் அமித்ஷா ஆலோசனை!

amith sha

தில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏற்பாடு செய்துள்ளார்.

தில்லியில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கும், மத்திய சுகாதாரத்துறை, தில்லியின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. 6 நாட்களில் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வருவதற்கு 13 நாட்களும், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக வருவதற்கு 8 நாட்கள் எடுத்த நிலையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரத்தை 6 நாட்களில் எட்டியது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தில்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் தில்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் தில்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக கூட்டம் நேற்று நடந்தது. தில்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தில்லியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தில்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் கொரோனா வைரஸ் பரவல் சூழல் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கேஜ்ரிவால், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மத்திய சுகாதாரத்துறை, தில்லி மாநகர மேயர்கள், தில்லியின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை 11மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories