நாகரீகக் கோமாளிகள்!

stalin udhayanidhi - 2026

கவிதை ஆக்கம் :
கண்ணன்  திருமலை ஐயங்கார்,

நாக்பூர், மஹாராஷ்டிரம்

நாங்கள் தமிழர்களே! நாகரீகம்  உள்ளவரே!
கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்;
நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 01

மூன்றுபடி  ரூபாய்க்கு அரிசியென்றோம் ஆட்சிகண்டோம்
மூன்றுபடி  எம்கணக்கில் ஒருபடிதான் என்றளித்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 02

“நீட்”டின்  ரகசியத்தை  அறிவிப்போம்  என்றுரைத்தோம்
நீட்டிவைத்து  பொதுஜனத்தை  டாஸ்மாக்முன்  புரளவைத்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 03

மதுவில்லா தமிழகத்தை  ஆக்கிடுவோ மென்றுரைத்தோம்
பொதுவாக்கி  மதுவெள்ளம் தரையோட மகிழ்ந்திட்டோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 04

இந்திமொழி  திணிப்பென்று  நீளெதிர்ப்பு  முழக்கமிட்டோம்
சந்தடியாய்  அதில்’விலக்கு எம்குடிக்கே’  அதைமறைத்தோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 05

சமத்துவம்  பேசிடுவோம்  உண்மையென்று நம்பவைப்போம்
கமுக்கமாய் முட்டுதரும்  கூட்டணியை அடக்கிவைப்போம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!!  06

பனையளவாய்  நிதிதரினும் வாங்கியதை பதுக்கிடுவோம்
தினையளவாய் ஒன்றியத்தை  புறங்கூறி  பழித்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 07

வரிசைகட்டி  ஊடகத்தை  கூர்வாள்மேல்  நடக்கவைப்போம்
தெரிகண்ணை கட்டிவைத்து யெம்திசையில்  செலுத்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 08

உயர்ந்தவிடம் செங்கோலை வைத்ததற்கும் முரண்பட்டோம் 
உயர்ந்ததமிழ் வடவர்பேச  தவறுகண்டு நகைத்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 09 

கேள்விகேட்கும்  யாரெனினும்  துச்சமென விலங்கிட்டோம்
ஆள்வதெனும் மமதையினால் தற்குறிபோல் சிரித்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories