கவிதை ஆக்கம் :
கண்ணன் திருமலை ஐயங்கார்,
நாக்பூர், மஹாராஷ்டிரம்
நாங்கள் தமிழர்களே! நாகரீகம் உள்ளவரே!
கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்;
நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 01
மூன்றுபடி ரூபாய்க்கு அரிசியென்றோம் ஆட்சிகண்டோம்
மூன்றுபடி எம்கணக்கில் ஒருபடிதான் என்றளித்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 02
“நீட்”டின் ரகசியத்தை அறிவிப்போம் என்றுரைத்தோம்
நீட்டிவைத்து பொதுஜனத்தை டாஸ்மாக்முன் புரளவைத்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 03
மதுவில்லா தமிழகத்தை ஆக்கிடுவோ மென்றுரைத்தோம்
பொதுவாக்கி மதுவெள்ளம் தரையோட மகிழ்ந்திட்டோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 04
இந்திமொழி திணிப்பென்று நீளெதிர்ப்பு முழக்கமிட்டோம்
சந்தடியாய் அதில்’விலக்கு எம்குடிக்கே’ அதைமறைத்தோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 05
சமத்துவம் பேசிடுவோம் உண்மையென்று நம்பவைப்போம்
கமுக்கமாய் முட்டுதரும் கூட்டணியை அடக்கிவைப்போம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 06
பனையளவாய் நிதிதரினும் வாங்கியதை பதுக்கிடுவோம்
தினையளவாய் ஒன்றியத்தை புறங்கூறி பழித்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 07
வரிசைகட்டி ஊடகத்தை கூர்வாள்மேல் நடக்கவைப்போம்
தெரிகண்ணை கட்டிவைத்து யெம்திசையில் செலுத்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 08
உயர்ந்தவிடம் செங்கோலை வைத்ததற்கும் முரண்பட்டோம்
உயர்ந்ததமிழ் வடவர்பேச தவறுகண்டு நகைத்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 09
கேள்விகேட்கும் யாரெனினும் துச்சமென விலங்கிட்டோம்
ஆள்வதெனும் மமதையினால் தற்குறிபோல் சிரித்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம் தெரிந்தவரே!! 10