April 23, 2025, 5:33 PM
34.3 C
Chennai

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

#image_title

மும்மொழி, ஹிந்தி திணிப்பு என்று மொழி உணர்வுப் பிரச்னையில் மிகப் பெரும் எதிர்காலத் திட்டம் பாழாகிக் கொண்டிருக்கிறது. எதிர்கால இந்தியாவின் செழிப்பும் வளர்ச்சியும் வருங்கால இளைய தலைமுறையின் கையில் தான் என்பதால், அவர்களை வலுவுள்ளவர்களாகச் செய்யும் கல்வியை, பொது அறிவை, திறன் மேம்பாட்டை வளர்க்கும் பிரதமர் மோடியின் கனவுத் திட்டத்தை வேரிலே அமிலம் ஊற்றி அழித்துக் கொண்டிருக்கிறது திமுக.,! 

இப்போது திமுக., விரித்துள்ள திசை திருப்பும் அரசியல் வலையில் தமிழர்கள் சிக்கிக் கொண்டு, மொழிப் பிரச்னையைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். இருமொழி, மும்மொழி என்பது வெறும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி அளவிலே நின்றுவிடும். சிறு வயதில் மனதில் பதியும் விஷயம் தான் ஒருவரின் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும். எனவே பள்ளிக் குழந்தைகளின் கல்வியில் தேவையற்ற பாடங்களை எடுத்துவிட்டு, தொழில்நுட்ப அறிமுகம், மொழி, தகவல் தொடர்பு போன்ற உலகளாவிய விஷங்களைப் புகுத்தலாம். அதற்கான முன்னோட்டம்தான் பிரதமர் மோடி எடுத்த கனவுத் திட்டமான பிஎம் ஸ்ரீ பள்ளிகள், சமக்ர சிக்ஷா அப்யான்! 

உள்ளடக்கம்

சமக்ர சிக்ஷ அப்யான்

அதென்ன சமக்ர சிக்ஷா அப்யான்? அதன் நோக்கம், செயல்பாடு, திட்டமிடல்தான் என்ன? அரசின் கல்வித் தளத்தில் சமக்ர சிக்ஷ அப்யான் – சமக் கல்வி திட்டம்  குறித்து அரசின் தளத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள்!

கல்விக்கான முழுமையான அணுகுமுறை

  • பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை முழுமையான தொடர்ச்சியாகக் கருதுதல்
  • முதல் முறையாக பள்ளிக் கல்விக்கான ஆதரவில் மூத்த இடைநிலை நிலைகள் மற்றும் பாலர் பள்ளி நிலைகளைச் சேர்த்தல்

நிர்வாக சீர்திருத்தம்

  • ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பு இணக்கமான செயல்படுத்தலுக்கு வழிவகுக்கிறது
  • திட்டத்தின் கீழ் தங்கள் தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மை
  • ‘பள்ளி’யை தொடர்ச்சியாகப் பார்க்கும் ஒருங்கிணைந்த நிர்வாகம்

கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துதல்

  • ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கவனம்
  • ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்களின் மேம்பட்ட திறன் மேம்பாடு
  • அமைப்பில் வருங்கால ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த SCERTகள் மற்றும் DIETகள் போன்ற ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்
  • பணியில் இருக்கும் மற்றும் சேவைக்கு முந்தைய ஆசிரியர் பயிற்சிக்கான முக்கிய நிறுவனமாக SCERT இருக்க வேண்டும் – பயிற்சியை ஆற்றல்மிக்கதாகவும் தேவை அடிப்படையிலானதாகவும் மாற்றும்.
  • பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதக் கற்றலை ஊக்குவிக்க ராஷ்ட்ரிய அவிஷ்கர் அபியானுக்கு ஆதரவு.
  • தொடக்க நிலையிலேயே அடிப்படைத் திறன்களை வளர்க்கும் பதே பாரத் பதே பாரத் திட்டத்தை ஆதரிக்கவும்.
  • ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.5000 முதல் ரூ.20000 வரை நூலக மானியங்களை வழங்குதல்.

டிஜிட்டல் கல்வியில் கவனம் செலுத்துதல்

  • அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 5 ஆண்டுகளுக்கு ‘ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு’-ஐ ஆதரிக்க, இது கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் – புரிந்துகொள்ள எளிதானது, தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் வகுப்பறைகள் திருப்பப்பட்ட வகுப்பறைகளாக மாறும்.
  • ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் பலகைகள் மற்றும் DTH சேனல்கள் மூலம் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட பயன்பாடு
  • UDISE+, ஷாகுன் போன்ற டிஜிட்டல் முயற்சிகள் வலுப்படுத்தப்படும்
  • உயர் தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளில் ICT உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
ALSO READ:  தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பள்ளிகளை வலுப்படுத்துதல்

  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்கு உலகளாவிய அணுகலுக்காக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி
  • கூட்டுப் பள்ளி மானியம் ரூ.14,500-50,000-லிருந்து ரூ.25,000-1 லட்சமாக அதிகரிக்கப்பட்டு பள்ளி சேர்க்கையின் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
  • தூய்மை நடவடிக்கைகளுக்கான குறிப்பிட்ட ஏற்பாடு – ‘தூய்மை வித்யாலயா’வை ஆதரித்தல்
  • அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துதல்

பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்

  • கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் (KGBVs) 6-8 ஆம் வகுப்பு முதல் 6-12 ஆம் வகுப்பு வரை மேம்படுத்துதல்.
  • ஆரம்ப நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை உள்ள பெண்களுக்கான தற்காப்புப் பயிற்சி
  • ‘பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ’ என்ற உறுதிப்பாட்டை மேம்படுத்துதல்

சேர்ப்பதில் கவனம் செலுத்துதல்

  • RTE சட்டத்தின் கீழ் சீருடைகளுக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ.400 லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டது.
  • RTE சட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்களுக்கான ஒதுக்கீடு, ஆண்டுக்கு ரூ.150/250 லிருந்து ரூ.250/400 ஆக உயர்த்தப்பட்டது. உற்சாகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான ஒதுக்கீடு (CwSN) ஆண்டுக்கு ரூ.3000 லிருந்து ரூ.3500 ஆக உயர்த்தப்பட்டது. ரூ. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிறப்புத் தேவைகள் உள்ள சிறுமிகளுக்கு மாதத்திற்கு 200 ரூபாய் உதவித்தொகை.

திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துதல்

  • உயர் தொடக்க நிலையில் தொழில் திறன்களை வெளிப்படுத்துதல் நீட்டிக்கப்படும்.
  • 9-12 ஆம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேலும் நடைமுறை மற்றும் தொழில்துறை சார்ந்ததாக மாற்றப்படும்.
  • ‘கௌஷல் விகாஸ்’ மீதான முக்கியத்துவத்தை வலுப்படுத்துதல்
  • விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் கவனம் செலுத்துதல்
  • விளையாட்டுக் கல்வி பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு பள்ளியும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ. 5000, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 10,000 மற்றும் இடைநிலை மற்றும் மூத்த மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 25,000 வரை விளையாட்டு உபகரணங்களைப் பெறும்.

பிராந்திய சமநிலையில் கவனம் செலுத்துதல்

  • சமச்சீர் கல்வி மேம்பாட்டை ஊக்குவித்தல்
  • கல்வியில் பின்தங்கிய தொகுதிகள் (EBBs), இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், சிறப்பு கவனம் செலுத்தும் மாவட்டங்கள் (SFDs), எல்லைப் பகுதிகள் மற்றும் நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 117 விருப்ப மாவட்டங்களுக்கு முன்னுரிமை

சமக்ர சிக்ஷ அப்யான் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கல்வித் தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் சமக்ர சிக்ஷ அப்யான் – திட்டம் நன்றாக அமலில் உள்ளது. அது குறித்த விவரங்களை கேரள அரசின் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். 

https://education.kerala.gov.in/samagra-shiksha-kerala

https://ssakerala.in

பி.எம் ஸ்ரீ பள்ளிகள்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் என்பவை, இதனுடன் இணைந்த அடுத்த படிநிலையிலான முன்னெடுப்பு. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் குறித்த திட்டமிடலை வெளியிட்ட போது கொடுக்கப்பட்ட எதிர்காலத் திட்டமிடல்கள் இவை…

உறுதியான வலுவான பாரதத்தை உருவாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் தகுந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் என்பது தற்போதைய இளைய தலைமுறையின் கையில் அல்லவா உள்ளது ! அவர்களுடைய கல்வி மற்றும் திறனை வளர்த்தால் தான் அவர்களை உலகளாவிய வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர் கொள்ள வைக்க முடியும். “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்” திட்டம் இந்திய அளவில் பள்ளிகளின் தரம் உயர்த்தலுக்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆகும்.

ALSO READ:  ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு; சில கருத்துகள்!

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன ?

”பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்” அதாவது  PM SHRI Scheme ,  அதாவது Pradhan Mantri Schools for Rising India  என்பது மத்திய அரசின் நிதி ஆதார ஆதரவுடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மத்திய, மாநில , நகராட்சி அல்லது ஊராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பள்ளிகளின் திறன் மற்றும் தரம் மேம்படுத்தும் திட்டமாகும்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடைபெற்று, நாடு தழுவிய முன்னோடிப் பள்ளிகள் குறித்து கருத்துரையாடல் நடைபெற்றது. மத்திய அமைச்சர், தர்மேந்திர பிரதான், இந்த முன்னோடிப் பள்ளிகள் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஆய்வகங்களாகவும், மாணவர்களை எதிர்கால மாற்றங்களுக்குத் தயார் செய்யும் களங்களாகவும் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

அதே ஆண்டு, செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் “ திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

வளரும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகள் திட்டம் ( PM SHRI Schools ) மத்திய அரசின் நிதி ஆதார உதவியுடன், செயல் திட்ட வழிகாட்டுதல்களுடன் 2022-23 கல்வியாண்டு முதல் 2026-27 வரை ஐந்தாண்டுகளில், படிப்படியாக, இந்தியா முழுவதிலும் சுமார் 14,500 பள்ளிகளில்  , சுமார் 27000 கோடி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

நோக்கமும் முக்ய அம்சங்களும்

மகிழ்வான கற்றல் சூழலில் தரமான, மேம்படுத்தப்பட்ட, சமச்சீரான , மாணாக்கர்களை அடுத்த நூற்றாண்டுக்குத் தயார்படுத்தும் கல்வி வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மாணாக்கர்களின் மதி நுட்பத்தை வளர்த்தல், கலை மற்றும் தொழில் திறனை வளர்த்தல், மொழித்திறன், சமூக உளவியல் கூறுகளின் மலர்ச்சி, வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகள், உள்ளூர் கலைஞர்கள் துணையுடன் கலை, கைத்தொழில் திறன் பெறுதல் என பல்வேறு முன்னெடுப்பகளைக் கொண்டது இத்திட்டம்.

புதிய தேசியக் கல்வித் திட்டம் 2020 இப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இளம் பிராயத்தினருக்கான அடித்தரக் கல்வி, பாதுகாப்பான , சுமையில்லா விளையாட்டு / செயல் முறை கற்றல் முறையில் தரப்படும். ஆயத்த நிலை அதாவது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வியில் சில வகுப்பறைப் பாடங்களும், ஒளிப்படபாடங்களும் ( வீடியோ, திரை) இருக்கும். நடுத்தர ( 6 முதல் 8 ம் வகுப்பு ) நேரடி ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பில் கலை மற்றும் அறிவியல் எனக் கடினமான பாடுபாடு இல்லாமல், பலதரப்பட்ட இயற்கையுடன் இயைந்த பாடங்களும் இருக்கும்.

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் அமலாக்கப்படும் பள்ளிகள் இத்தகைய முன்மாதிரியான கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் தர மேம்பாடு :

கற்றல் முறையில் தரம், புத்தாக்க முறைகள் ( முழுமையான சமச்சீரான அணுகுமுறை, புதிய கற்றல் முறைகள், புத்தகப்பையிலா நாட்கள், உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பு, திறன் தேர்ச்சி – கற்றல் முறை நம்பகத்தன்மை / வெற்றியை சோதித்தல் , முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்)

மாணாக்கர்களின் ஆரோக்கிய குறியீடுகள் / முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்

கல்வி உரிமை சட்டப்படியான சலுகைகள் (ஆர்.டி.ஈ)

ALSO READ:  பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

அறிவியல், கணித பாடங்களுக்கான கருவிகள்

அடித்தரக் கல்வி (இளஞ்சிறார் ) பாதுகாப்பான கல்விச்சூழல், அடிப்படை எண்ணும் எழுத்தும்

மாணவர்கள் விருப்பம் போல பாடங்களைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளும் வசதி

உள்ளூர் மொழியில் கல்வி, மொழி இடையூறு தவிர்க்க தொழில் நுட்பக்கருவிகள் தயார் நிலையில் இருத்தல்

கணினி வழிக் கல்வி, ஸ்மார்ட் போர்ட், டிஜிட்டல் நூலகம், மேம்படுத்தப்பட்ட அறிவியல் / கணித/ மொழி/ கணினி ஆய்வகங்கள்

விளையாட்டுக் கருவிகள்/ விளையாட்டுத் தளங்கள் அமைத்தல்

கலை/ உள்ளூர் சிறு தொழில் கற்க வசதியான கூடங்கள் / தேவையான கருவிகள்

பள்ளியை பசுமை வளாகமாக மேம்படுத்துதல் : சூரிய சக்தி உற்பத்தி, நெகிழி இல்லா வளாகம் ( பிளாஸ்டிக் தவிர்த்தல் ), கழிவுகள் மறுசுழற்சி, பசுமைத் தோட்டப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு.

பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆங்காங்கு செயல்படும் மாநில,  நகராட்சி, ஊராட்சி அமைப்புகள் மற்ரும் தன்னார்வல அமைப்புகள் உதவியுடன் மேம்படுத்துதல் .

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தேர்வு

நாட்டின் அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பள்ளிகள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகள் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முன்னோடி ஆய்வகப் பள்ளிகளாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாகும். அவை மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டிகளாக அமையும்.

பள்ளிகள் தற்போது எந்த அமைப்பில் இருந்தாலும் ( நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மாநில அரசு, மாநகராட்சி, ஊராட்சி என எதுவாகிலும் ) பி.எம்.ஸ்ரீ பள்ளி இணைய தளத்தில் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போதுள்ள வசதிகளுடன், பள்ளிகள் அங்கிகரிக்கப்பட்டு, தர மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், நிதி உதவி போன்றவை பகிரப்படும். மாநில அரசுகள் மற்றும் தன்னார்வல அமைப்புகளின் பங்கெடுப்பும் வரவேற்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் திட்டப்பயன்கள் :

புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்

மாணவர்கள் வருகை மற்றும் கல்வி /திறன் மேம்பாட்டைக் கண்கணிக்கும் தொடர்ச்சியான ஆவணங்கள்

ஒவ்வொரு மாணாக்கரின் கல்வி /திறன் தேர்ச்சியானது மாநில அல்லது தேசிய சராசரி திறன் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருக்க முயற்சித்தல்.

அடிப்படைக்கல்வி தவிர ஏதேனும் ஒரு திறன்கல்வியில் தேர்ச்சியுறுதல்

கலை/ விளையாட்டு / ஐ.சி.டி வசதி ஒவ்வொரு மாணாக்கருக்கும்  சென்றடைவதை உறுதி செய்தல்

பள்ளி ஒரு பசுமை வளாகமாக மாறுதல்

ஒவ்வொரு மாணாக்கருக்கும் உளவியல் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகள் / வாய்ப்புகள்

நமது நாட்டின் பாரம்பரியம், உன்னதக் கலைகள், வரலாறு பற்றிய கல்வி, நாட்டுப்பற்று கொண்ட குடிமக்களை உருவாக்குதல்

நற்பண்புகளை ஊக்குவிக்கும், நற்குடிமக்களை உருவாக்கும் ஆக்கபூர்வ கல்வி.

புத்துணர்வூட்டும் புதிய முயற்சி

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்ட வரைவு, செயல்படுத்தும் முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள், திட்ட முன்னெடுப்பைக் கடுமையாக சோதித்தல்  என மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் சுமார் பதினெட்டு லட்சம் மாணாக்கர்களுக்கு பயனளிக்கும்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது.  

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் இருபத்தைந்து பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

”ஸ்ரீ” என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும். பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் நம் பிள்ளைகளின் கல்விச் செல்வத்தை உறுதி செய்யும் !

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து, மொழி அரசியலில் இந்த அறிவிலிகள் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories