தமிழக ஆட்சியை ஆதரித்து பேசிய டிடிவி !

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை

ttv - 2026ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள ஒண்டிவீரனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்.

அப்போது அவரிடம் பால் விலை குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த பேட்டியில், பால் விலை உயர்வு என்பது ஏழை மக்களை பாதிக்ககூடியது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. ஆதலால் உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கூறினார். stalin - 2026மாவட்டத்தை பிரிப்பது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், லஞ்ச லாவண்யங்களை மறைக்கவே தமிழக அரசு இவ்வாறு செய்து வருகிறார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த கருத்துக்கு  பதிலாக  டிடிவி தினகரன் கூறியிருப்பது, ‘மக்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்தை பிரிப்பதால் அந்த மக்களுக்கு வளர்ச்சிதான் ஏற்படும். இதில் எந்த தவறுமில்லை, லஞ்சம், ஊழலை மறைக்கவே மாவட்டத்தை பிரிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். அது பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தான்’ என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.