சங் பரிவார் குறித்து அவதூறு: ‘போடா மூட்டாள்’க்காக… காங். எம்.பி. ஜோதிமணி மீது பாஜக., போலீஸில் புகார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
karur bjp complaint - 2026

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாஜக., சங்பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாகக் கூறி
கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆக.21, 22 ஆகிய தேதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் ஜோதிமணி செண்ணிமலை என்ற அதிகாரப்பூர்வ தன்னுடைய பெயரில் உள்ள டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றை அவதூறாகக் குறிப்பிட்டு, கருத்துப் பதிவு செய்துள்ளார் என்று கூறி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், கரூர் நகர காவல் நிலையத்தில் ஜோதிமணி மீது புகார் மனு அளித்தார் ..

complaint against jothimani - 2026

அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜக.,வினர் வந்திருந்தனர். ஜோதிமணி மீது சட்டபூர்வமான உரிமை நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் கோரிக்கை விடப் பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக நம் தமிழ் தினசரி தளத்தில் வந்த செய்தி…

எப்போ தொங்கப் போறீங்க…? கரூர் எம்.பி., ஜோதிமணியை காய்த்து எடுக்கும் நெட்டிசன்ஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.