கொழுக்கட்டை + பூரணம் ரெசிபி

கொழுக்கட்டை
நன்றி-பாமா சமையல்.

தேவையான பொருட்கள் – மேல் மாவு :

அரிசி மாவு                 : 1 டம்ளர்
தண்ணீர்                       : 1 டம்ளர்
உப்பு                               : 1 கல்
எண்ணை                    : 2 டி ஸ்பூன்

செய்முறை :

  • ஒரு அகலமான, அடிகனமான பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீரை விடவும்.
  • தண்ணீர் தள தள வென்று கொதிக்கும்பொழுது 1 கல் உப்பு, எண்ணை விட்டு பிறகு மாவை கொட்டி கிளறவும்.
  • அடுப்பை sim இல் வைக்கவும்.
  • மாவின் நிறம் மாறு கையில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கி விடவும்.
  • பிறகு ஒரு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து மாவின் மேல் மூடி வைக்கவும். மாவு காயாமல் இருக்கும்.
  • தேவையான பொருட்கள் – தேங்காய் பூரணம் :

தேங்காய்                : 1 மூடி (துருவிக்கொள்ளவும்)
வெல்லம்                : 50 கிராம் (பொடிக்கவும்)
ஏலக்காய்                : 1 Nos. (பொடிக்கவும்)

செய்முறை :

  • வாணலியில் தேங்காய், வெல்லம், சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
  • இரண்டும் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

தேவையான பொருட்கள் – உளுந்து பூரணம் :

வெள்ளை உளுந்து            : 1 டம்ளர் (1/2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பச்சை மிளகாய்                  : 5 Nos. (அவரவர் காரத்திற்கேற்ப)
உப்பு                                          : தேவையான அளவு
பெருங்காயம்                       : சிறிது
கடுகு                                         : 1 டி ஸ்பூன்
தேங்காய் துருவல்            : 4 டி ஸ்பூன்
எண்ணை                                : 2 டி ஸ்பூன்

செய்முறை :

  • உ.பருப்பு, ப.மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும்.
  • தண்ணீர் விடாமல் தெளித்து அரைக்கவும்.
  • பிறகு அதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக விடவும்.
  • பிறகு ஆற வைத்து கையால் உதிர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போட்டு கடுகு பொரிந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள உளுந்து கலவையை போட்டு தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
  • இது உளுந்து பூரணம்.

தேவையான பொருட்கள் – எள் பூரணம் :

வெள்ளை or கருப்பு எள்              : 100 கிராம்
வெல்லம்                                           : 50 கிராம்
ஏலக்காய்                                           : 2 Nos.

செய்முறை :

  • ஒரு வாணலியில் எல்லை போட்டு வறுக்கவும்.
  • எள் படபடவென்று வெடிக்கும், கருக விடாமல் வறுக்கவும்.
  • ஆறவைத்து மிக்சியில் எல்லை போட்டு ஒரு சுற்று சுற்றி வெல்லம், ஏலக்காய், சேர்த்து பொடித்து எடுக்கவும்.
  • எள் பூரணம் ரெடி

செய்முறை – கொழுக்கட்டை :

  • சிறிது மாவை எடுத்து நன்றாக பிசைந்து உருட்டி சோப்பு போல் செய்யவும்.
  • பூரணத்தை வைத்து மூடி மூக்கு வைத்து ஆவியில் 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால் கொழுக்கட்டை ரெடி.
  • கொழுக்கட்டை மேல் வேர்த்தால் போல் இருக்கும். அது வெந்த அடையாளம்.
  • தேங்காய் பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்தால் – வெல்ல கொழுக்கட்டை
  • உளுத்தம் பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்தால் – கார/உப்பு கொழுக்கட்டை
  • எள்ளு பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்தால் – எள்ளு கொழுக்கட்டை

பொரித்த கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

மைதா மாவு                 : 100 கிராம்
சால்ட்                              : 1 சிட்டிகை
தண்ணீர்                         : தேவையான அளவு
பொரிப்பதற்கு             : எண்ணை or நெய் அவரவர் சௌகர்யம்

செய்முறை :

  • மைதாமாவுடன் சால்ட் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
  • ஒரு 1/2 மணி நேரம் கழித்து சப்பாத்தி போல் கொஞ்சம் thin ஆக இடவும்.
  • ஏதாவது ஒரு மூடியால் (round) கட் பண்ணி தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மூக்கு வைக்கவும்.
  • எண்ணையை காய வைத்து நிதானமான சூட்டில் சிறிது சிறிதாக போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
  • பொறித்த கொழுக்கட்டை ரெடி.
Kozhukattai - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories