சிலை பாதுகாப்பு, பராமரிப்பு பூங்கா அமைக்க இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்!

Reporters Diary உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
rama ravikumar - 2026

தமிழகத்தில் சிலை உடைப்பு சம்பவங்களை தடுத்திட- ” சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பூங்கா ” அமைக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு கொடுத்துள்ளது.

தங்க முத்துகிருஷ்ணன் (சிவசேனை தலைவர்), ஜி ராதாகிருஷ்ணன் (சிவசேனை தலைவர்), ஆர் டி பிரபு (பாரத் இந்து முன்னணி தலைவர்), வீர். வசந்தகுமார் (தென் பாரத இந்து மகா சபா), வா சிவாஜி, (இந்து சங்கம்), விஎம் சிவகுமார், லட்சுமணன், ஸ்ரீராம் (ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம்) ஆகியோரும் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.

அக்கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் மனுவில் உள்ள கோரிக்கை குறித்து குறிப்பிட்ட போது…

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் நாட்டுக்காக பாடுபட்ட பல தலைவர்களின் திருவுருவச் சிலைகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருக்கிறது 1989, 1991, 1996.. உள்ளிட்ட ஆண்டுகளில் தமிழகம் சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்டது என்பது நாடறிந்த உண்மை.

அதன்பின்னர் தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து கொண்டிருக் கிறது. நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய சிலை உடைக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறது.

உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அரசாங்கத்தினால் புதிய சிலை நிறுவப் பட்டிருக்கிறது.இதற்கு இந்து தமிழர் கட்சி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் . தடுப்பு நடவடிக்கையில் செயல்பட்ட காவல்துறைக்கும் பாராட்டுக்கள்.

அதேநேரத்தில் சாதித்த தலைவர்களை எல்லாம் சாதித் தலைவர்கள் ஆக மாற்றிய கொடுமை தமிழகத்தில் இருக்கிறது. சிலைகள் அவமானப் படுத்தப்படுவதும், சிலைகள்உடைக்கப் படுவதும், தொடர்கதையாகி விடக்கூடாது. இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய சமூக விரோத ,அமைதியை விரும்பாத கும்பல்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் அனைத்து தலைவர்களும் மதிப்பு கூறியவர்கள் தான்.

தமிழக அரசு ஒவ்வொரு தாலுகா அல்லது ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிலைகள் உதாரணமாக (பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வ உ சிதம்பரம் பிள்ளை டாக்டர் அம்பேத்கர் பெருந்தலைவர் காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ….. போன்ற அனைத்து தலைவருடைய சிலைகளையும் அகற்றி தாலுகா அளவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து
சமத்துவபுரம் போல) “சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா” அமைந்திட வேண்டுகிறோம்.

இதனால் மதிப்புமிக்க தலைவர்கள் சிலையின் மீது காக்கைகள் எச்சமிடும் சூழல் தவிர்க்கப்படும்! சமூக விரோத கும்பலால் சிலைகளை உடைக்கப் பட்டு வன்முறை வெறியாட்டம் தடுக்கப்படும்.

அப்படி அமைக்கப்படும் சிலை பாதுகாப்பு பூங்கா பூங்கா பராமரிப்பு முறையாக பணியாளர்களை அமர்த்தி தலைவர்களின் சிலைகளை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அந்தந்த தலைவர்களின் பிறந்தநாள் நினைவு தினங்களில் அவருக்கு மரியாதை செலுத்த விரும்பக்கூடிய அமைப்பினர் சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தெரியப்படுத்தி மரியாதை செலுத்தி விட்டு வரலாம்.

இதுபோன்ற ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை இந்து தமிழர் கட்சி மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பாக கோரிக்கை புகார் மனுவை சமர்ப்பிக்கிறோம். .. என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.