ஆன்மீக கேள்வி பதில்- தினமும் கணபதியை துதிப்பதற்கு உகந்த நாமம், ஸ்லோகம் எது?

Published:

karpagavinayaka - 2026

ஸ்காந்த புராணத்தில் கணேச கண்டம் என்று ஒரு பகுதி உள்ளது. அதிலும் மற்றும் கணேச புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கூறப்பட்டுள்ள மந்திரம் ‘ஸ்ரீ கணேசாய நமஹ”.

இதனை சிரத்தையோடு ஜபம் செய்தால் அனைத்து நற்பலன்களையும் பெறலாம்.

இதன் மகிமை சாதனை செய்வதால் தெரியவரும். இது மகாமந்திரம்.

இதிலுள்ள ‘க’ காரத்திற்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது.

ஸ்ரீ யோடு சேர்த்து இந்த மந்திரத்தை தினமும் ஜபம் செய்யலாம்.

ஆயிரம் எண்ணிக்கையில் ஜபம் செய்தால் அற்புதமான பலன் பெறலாம்.

பெரிய பெரிய மந்திரங்களைப் படிக்க வேண்டும் என்பதல்ல.

இந்த மந்திரத்தை சிரத்தையோடு ஜபம் செய்ய முடிந்தாலே போதும்.

இதன் தத்துவம் அறிந்து செய்தால் இன்னும் நல்லது.

அனேக தத்துவம் ‘கணம்’ எனப்படுகிறது. ஏகத்துவம் இறைவன்.

vinayaka peruman - 2026

பிரபஞ்சம் அனைத்தும் அனேகமாக காணப்படுகிறது. எனவே பிரபஞ்சம் அநேகம். அனேகமான பிரபஞ்சத்திற்கு இறைவன் என்பது ஒருவனே. “ஏகம் அத்விதீயம் ப்ரம்மா” அதுவே கணேச!

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

விஸ்வம், விஸ்வபதி இரண்டும் இந்த நாமத்திலே உள்ளது.

பிரம்ம ஞானம் அளிக்கக்கூடிய இந்த நாமத்தின் மகிமையை அறிந்து கொண்டு “ஸ்ரீ கணேசாய நமஹ” என்று ஜெபம் செய்யவேண்டும்.

முக்கியமான கணபதி ஸ்லோகங்கள் நிறைய உள்ளன. மந்திரத்திற்கு ஈடான ஸ்லோகம் இது. சாட்சாத் பிரம்மதேவர் செய்த ஸ்தோத்திரம். இதில் ‘வக்ர துண்ட’ மஹா மந்திரம் உள்ளது.

கேட்பதற்கு எளிதான சுலோகமாக காணப்படுகிறதே தவிர பக்தியோடு சாதனை செய்தால் பலன் சீக்கிரமாகவும் சம்பூர்ணமாகவும் கிடைக்கும்.

” வக்ரதுண்ட மஹாகாய கோடி சூர்ய சமப்ரப !
நிர்விக்னம் குரு மே தேவா ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”

கடினமான ஸ்லோகங்களை தேடிப் படிக்க வேண்டும் என்பதல்ல.

நமக்குத் தெரிந்தவற்றுள் உள்ள சிறப்பை அறிந்து கொண்டு அதனைப் படித்து வந்தாலே போதும்.

ருஷிகள் நம்மீது கருணையோடு இந்த ஸ்லோகங்களை பழக்கப்படுத்தி உள்ளார்கள்.

இந்த மந்திரத்தையும் இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கணபதியின் கிருபை சீக்ரம் கிடைக்கும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
தமிழில் – ராஜி ரகுநாதன்

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img