சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்… தமிழக கிராமத்துக்கு பேருந்து இயக்கம்!

உள்ளூர் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
bus - 2026

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளாகியும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. இதனால் பேருந்துக்காக 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்லும் அவல நிலை நீடித்து வந்தது.

இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பல கட்ட போராட்டத்துக்குப் பின்னர், முதன் முறையாக அந்த கிராமத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

இதனால், மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.