நிரம்பி வழியும் கருப்பாநதி அணை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
karuppanadhi - 2026

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் கருப்பாநதி அணை நிரம்பி வழிகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்து, முழுமையாக வெளியேற்றப்படுவதால் கடையநல்லூர் பாப்பன்கால்வாய், பெரிய கால்வாய் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

இதனிடையே, நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக சமூகத் தளங்களில் செய்தி பரவியது. ஆனால் அது வதந்தீ என்று கூறியுள்ளார் கடையநல்லூர் தாலுகா அலுவலர். நேற்று பெய்த மழைக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு தற்போது மழை இல்லை தண்ணீர் வருகை குறைந்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தோவாளை, ஆரல்வாய்மொழி, சென்பராமன்புதூர், தாழாக்குடி, தடிகாரகோணம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.