வயோதிகரை தாக்கிய கும்பல்! பணத் தகராறு!

Published:

supramani 1 - 2026

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் தாக்கப்பட்ட சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்னும் பகுதியில் கரட்டுப்பட்டி ரைஸ்மில் ரோடு உள்ளது அங்கு சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதி மின்வாரியத்தில் கணக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி சுப்பிரமணியன் ஓய்வு பெற்றார்.

தனது உறவினரான செல்வம் என்பவரிடமிருந்த தென்னந்தோப்பை 16 லட்சம் மதிப்பில் வாங்கிக்கொள்வதற்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற செல்வம் தென்னந்தோப்பை சுப்ரமணியனின் பெயருக்கு மாற்றி கிரையம் செய்யவில்லை. பணத்தையும் சுப்ரமணியன் இடம் திருப்பித் தரவில்லை.

பல நாட்கள் பொறுத்துக்கொண்ட சுப்பிரமணியன் தனக்கு நேர்ந்தை ஊர் பெரியவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். சுப்பிரமணியன் செய்த இச்செயலால் செல்வம் கடுமையாக கோபமடைந்தார்.

தனது மனைவி கவிதாவின் தூண்டுதலின் பேரில் உறவினர்களின் உதவியுடன் 5-ஆம் தேதியன்று சாலையில் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியைக் கடுமையாக தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த தாக்குதல் சம்பந்தமான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வம் மற்றும் அவரது மனைவி கவிதாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட உறவினரான பிரகாஷ் என்பவர் தலைமறைவாகி விட்டதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img