kaithu e1563169848461 - 2026

சென்னை அம்பத்தூர் விவேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மேலும் தனியார் நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வருகிறார்.

விவேஷ் படித்து வந்த பல்கலைக்கழகத்தில் 25 வயது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.. இருவரும் ஒரே மாநிலம் என்பதால் நட்பாக பழகி வந்துள்ளார் ஆசிரியை.

இவ்வாறு இருக்க தனது படிப்பு முடிந்து விட்டதாகவும், அதற்கு பார்ட்டி தருவதாகவும் கூறி பேராசிரியையை விவேஷ் வெளியே போக அழைத்துள்ளார்.

shadow queen - 2026

அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பூஞ்சேரி அருகே இருந்த சவுக்கு காட்டிற்குள் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் சந்தேகமும் அடைந்த பேராசிரியை இங்கே எதற்கு அழைத்து வந்தாய் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு உள்ளேதான் விடுதி உள்ளது. அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறியுள்ளார். பின்னர் பேராசிரியையிடம் கத்தி ஒன்றை காட்டி ஆடைகளை அகற்றும்படி மிரட்டியுள்ளார். அவர் எத்தனைக் கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

பின்னர் மீண்டும் பைக்கில் ஏற்றி, பேராசிரியையின் விடுதியில் விட்டுச்சென்ற விவேஷ் இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோவை இணையதளத்தில் விட்டு விடுவேன் என பேராசிரியையை மிரட்டிச்சென்றுள்ளார். பின்னர் மறுநாள் பேராசிரியைக்கு போன் செய்து உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.

cell phone - 2026

இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை இதுகுறித்து செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதனை தொடர்ந்து காவல்துறையினர் விவேஷை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த வீடியோவை அழித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending