மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி

Published:

madras regiment indian army3 - 2026

மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தில் உள்ள பேரக்ஸில் 320 இளம் ராணுவ வீரர்களுக்கு செப்.28 சனிக்கிழமை இன்று மேஜர் ஜெனரல் எச்.எஸ்.ராஜா சுப்பிரமணி எஸ்எம் விஎஸ்எம் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்டது.

46 வாரங்கள் கடினப் பயிற்சி முடித்த வீரர்கள் வரலாற்றுப் பழைமை வாய்ந்த பேரக்ஸில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டது பெருமை வாய்ந்தது.

இந்த நிகழ்ச்சி அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் நினைவில் கொள்ளத்தக்கதாக அமைந்துவிட்டது.

madras regiment indian army2 - 2026

சத்தியப் பிரமாணம் முடிந்து மேஜர் ஜெனரல் ராஜா சுப்ரமணி பேசுகையில், இந்த இளம் ராணுவ வீரர்கள் கடினமான பயிற்சி மேற்கொண்டு இந்திய ராணுவத்துக்கு தங்களை அர்ப்பணிப்பதாகவும், அவர்களது எதிர்காலம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

madras regiment indian army1 - 2026

இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், மற்றும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ராணுவ வீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img