நெசவு தொழில் மேம்பட கதர் ஆடைகளை வாங்கிடுவீர்: முதல்வர்!

Published:

cm 1 - 2026

காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நெசவு தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கதரின் பயன்பாடு சுதேசியின் அடித்தளமாகும்” என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை நினைவில் கொண்டு அன்னாரின் பிறந்தநாளான அந்நன்னாளில், கதர் ஆடைகளை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும்.

கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் ரகங்களை தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மக்களின் மனதை கவரும் வண்ணம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், ஏழை, எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, அவர்தம் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென, நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

cm - 2026
ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img