திருச்சி லலிதா ஜுவல்லரியில்… நகைகள் கொள்ளை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல் வணிகம்
lalithajewellery - 2026

திருச்சி: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு கடை திறந்த போது, அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில் போலீஸ் துணை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரமும் உறங்காமல் மக்கள் நடமாட்டம் உள்ள திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையின் பின்புறம் வழியாக துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கீழ் தளத்தில் உள்ள அனைத்து நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருச்சி கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.