
பொதிகை தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை சரியாக நேரலை செய்யவில்லை என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தூர்தர்ஷன் சென்னை பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரதப் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை சரியாக நேரலை செய்யவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இது குறித்து விசாரித்து, உதவி இயக்குனர் வசுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.
முக்கியமான நிகழ்ச்சியை நேரலை செய்யாமல் வேண்டுமென்றே சொதப்பியதாகக் குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன. இதற்கு, சென்னை தூர்தர்ஷன் கேந்திராவில் பணி புரியும் முக்கிய அதிகாரிகள், கட்சி ரீதியாக செயல்பட்டு வருவதே காரணம் என்று கூறப் படுகிறது. மேலும், சென்னை கேந்திரா எடுக்கும் நேரலை நிகழ்ச்சியைத்தான் மற்ற டிடி சேனல்களும் நேரலையை எடுத்து ஒளிபரப்பு செய்யும். ஆனால், சென்னை வந்த பிரதமரின் நிகழ்ச்சியை வேண்டுமென்றே புறக்கணித்து செயல்பட்டது டிடி.,யில் உள்ள சில மூத்த அதிகாரிகள் என்றும், ஒரு பெண்மணி பலிகடா ஆக்கப் பட்டிருப்பதாகவும் கூறப் படுகிறது.
பிரதமர் செய்தியை ஒளிபரப்பாமல் போனதற்கு மூலகாரணம் என்று நம்பப்படுகிற Head of regional news unit – Doordharshan kendra – அண்ணாதுரை மீதும் விசாரணை நடந்து வருகிறதாம். இவர் 2004 2014 வரை முன்னாள் மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனிடம் OSDஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் கொடுத்த 48 நாள்களில் 4 வினாடி அளவுக்கு கூட பொதிகையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அத்திவரதரை ஒளிபரப்ப தடை விதித்ததும் – ‘மூட நம்பிக்கை’ என்பதால் தடை விதித்ததாகவும் விளக்கம் சொன்னார் அண்ணாதுரை என்று கூறப்படுகிறது.





தேச தà¯à®°à¯‹à®•ம௠. தேசிய தோலை காடà¯à®šà®¿ யில௠பிரிதமமநà¯à®¤à®¿à®°à®¿ நிகழà¯à®šà¯à®šà®¿à®•ளை வெளியிடாத௠கà¯à®±à¯à®±à®®à¯