ஆரம்பித்த விநியோகம்! 100 வாடிக்கையாளரை தொட்ட ஏத்தர் 450!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
e bike 1 - 2026

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோகத்தை துவங்கியது.

சென்னையில் ஏத்தர் 450 விநியோகம் சமீபத்தில் துவங்கி அதற்குள் 100 வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

இதுவரை சென்னையை சுற்றி பத்து இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி கட்டமைத்து இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.

சென்னை முழுக்க ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சாய் கிங்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இதன் மூலம் நகர் முழுக்க இயங்கி வரும் 30 விற்பனை மையங்களில் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போரூர் மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள சாய் கிங்ஸ் விற்பனையகங்களில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட்டுவிட்டது.

இத்துடன் சென்னையை சுற்றி பல்வேறு பகுதிகளில் ஏத்தர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் படிப்படியாக கட்டமைக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.