பயம் பற்றி பேச அருகதை இல்லை! ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
stalin 2 - 2026

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் இடப்பட்ட பதிவு கடும் சர்ச்சையானதைத் தொடர்ந்து அது நீக்கப்பட்டது.

பெரியாரின் நினைவுநாள் குறித்து தமிழக பாஜக பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கியிருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்தை டிவீட் செய்திருந்தார்.

“பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக.
அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!
.அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக சும்மா இருந்து விடுமா என்ன? உடனடியாக ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மற்றொரு பதிவை இட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், அந்தப் பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?

இந்துக்கள் என்றாலே மிரண்டு விடுகிறீர்கள் போலும். அந்த பயம் இருக்கணும் ஸ்டாலின் என்று, விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில் இடப்பட்டு பிறகு நீக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தையும் இணைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.