ஆரம்பமே ஆபத்து… விபத்து… ஒன்றோடொன்று மோதி நசுங்கிய புதிய ஆம்புலன்ஸ்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ambulance hits
ambulance hits

விஜயவாடா பந்தர் ரோட்டில் ஒன்றன்பின் ஒன்றாக புத்தம்புதிய ஆம்புலன்ஸுகள் மோதிக் கொண்டன.

புதிதாக மக்களின் உதவிக்காக வந்த ஆம்புலன்ஸ்கள் விபத்துக்கு ஆளாகின. ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதால் அவை சேதமடைந்தன. விஜயவாடாவில் உள்ள பந்தர் ரோட்டில் இந்த சம்பவம் நடந்தது.

புதன்கிழமை காலை விஜயவாடா பென்ஞ் சர்க்கிளில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கரங்களால் தொடங்கப்பட்ட 108, 104 ஆம்புலன்ஸ்கள் மசிலிப்பட்டினம் நோக்கி செல்லும் போது விபத்துக்கு உள்ளாயின. பென்ஞ் சர்க்கிளில் ஏற்பாடு செய்த மேடைமீதிருந்து ஒய் எஸ் ஜகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அந்த வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட மாவட்டங் களுக்கு கிளம்பி சென்றன. சுமார் 70 க்கும் மேலாக 108, 104 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மசிலிப்பட்டினம் நோக்கி கிளம்பின. முன்பே தீர்மானத்தபடி நண்பகலுக்குள் மசிலிப்பட்டினம் சேர வேண்டியிருந்தது.

பென்ஸ் சர்க்கிளில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவற்றில் 3 ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளாயின. பந்தர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் சடன் பிரேக் போட்டார். அதன் விளைவாக அந்த வாகனத்தின் பின்னால் இருந்த மற்றொரு ஆம்புலன்ஸ் மீது மோதிக் கொண்டது.

jaganmohan ajpg
jaganmohan ajpg

அதே சமயத்தில் பின்னாலிருந்த ஆம்புலன்சும் அதன் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் முன்னும் பின்னும் சேதமடைந்தன. அவற்றின் பாகங்கள் நசிங்கின. அதனால் சிறிது நேரம் பந்தர் ரோட்டில் வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

செய்தி அறிந்த உடனே டிராபிக் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். மூன்று வாகனங்களையும் டோயிங் செய்தார்கள். சாலையோரமாக எடுத்துச் சென்றார்கள். சாலையில் வாகனங்களின் போக்குவரத்தை சரி செய்தார்கள். இந்த மூன்றையும் உடனே மராமத்து செய்து அவற்றை சேரவேண்டிய இடத்திற்கு அனுப்புவோம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சடன் பிரேக் போட்டதால் இந்த விபத்து நேர்ந்தது என்றும் வாகனங்களில் தொழில்நுட்ப கோளாறு எதுவும் நேரவில்லை என்றும் கூறினர்.

jagan mohan
jagan mohan

புதன்கிழமை காலை பென்ஞ் சர்க்கிளில் ஜகன் மோகன் ரெட்டி மொத்தம் ஆயிரத்து 88 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஆள்ள நானி, விவசாயத்துறை அமைச்சர் குரசால கன்னபாபு, அறநிலையத்துறை அமைச்சர் வெல்லம்பல்லி ஶ்ரீனிவாஸ், கிராம அபிவிருத்தி துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, பிராமண கார்ப்பரேஷன் சேர்மன் மல்லாதி மகாவிஷ்ணு மற்றும் பல எம்எல்ஏக்களும் பங்கு பெற்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.