திமுக.,வின் கோல மேட்டர் அலங்கோலம் ஆய்டிச்சே! இதுல… அமெரிக்கை நாராயணன் வேற..!

Published:

kolam americai narayanan 1 - 2026

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டத்தை திமுக., திடீரெனத் தொடங்கியுள்ளது. இதில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் திட்டமிட்ட ரீதியில் திமுகவினர் போராட்டங்களை பல்வேறு தளங்களில் இருந்து நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக இன்று காலை பெசன்ட் நகர் 4 வது அவென்யூ பகுதியில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்றுகூடி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்!

kolam protest1 - 2026

பொது இடங்களிலும் வீடுகள் முன்பும் கோலம் போட்டு அதன் அருகில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை எழுதி வைத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாஸ்திரிநகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவிகளை போலீசார் கைது செய்தனர். போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்ட 6 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

kolam protest - 2026

இதுபோன்று நூதன முறையில் வேறு எவரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்!

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதனிடையே, தனது பங்குக்கு அலங்கோல கிறுக்கல் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டார் காங்கிரஸ் பிரமுகரான அமெரிக்கை நாராயணன்!

Related articles

Recent articles

spot_img