வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-22)

Published:

vantherikaL vambupracharam - 2026

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“Health system of India like Ayurveda etc., are not evidence based, but produce placebo effect. இந்தியாவின் ஆரோக்கிய சூத்திரங்களும், ஆயுர்வேத மருந்துகளும் ஆதாரமற்ற மருத்துவ முறைகள்!” என்று நம் பண்டைய மருத்துவ முறையை வந்தேறிகள் ஏளனம் செய்தனர்.

விஞ்ஞானம் வளர்ந்து வரும் போது முறைகேடான வாழ்க்கை முறையும் வளர்கிறது. ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த தேசிய மருத்துவமுறை அலட்சியத்துக்கு உள்ளானது.

பாதுக்காப்பான மூலிகைகளும் அரிதான ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை லடசியமாகக் கொண்டு அவதரித்த ஆயுர்வேத மருத்துவ முறையும் மக்களால் ஒதுக்கப்பட்டது.

“ஆயுர்வேத ப்ரயோஜனந்து ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய லக்ஷணம் – ஆதுரஸ்ய விகார பிரஸமனம்”.

பொருள்: ஆரோக்கியமாக உள்ளவனின் ஆரோக்கியத்தை காப்பது, நோயாளிக்கு வந்த நோயை நீக்குவது இரண்டும் ஆயுர்வேதத்தின் பயன்கள்.

இப்போதும் நம்மிடையே வாழும் எண்பது, தொண்ணூறு வயது முதியவர்கள் நல்ல உடல் வலிமையோடு இருபதற்குக் காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, ஓய்வு, சுகாதாரமான வாழ்வியல் முறை.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!
ayurveda - 2026

முறைகேடான உணவுப் பழக்கமும் கேளிக்கைகளும் நோயாளிகளை உருவாக்குகிறது. மூலிகைகள், நாடி பார்த்து நோயைக் கண்டறியும் வழிமுறைகள், பாட்டி வைத்தியம் போன்றவை மறைந்து போயின.

அதன் பலனாக புதுப்புது நோய்களோடு, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பக்க விளைவுகளோடு கூடிய மருந்துகளை பயன்படுத்துவதால் உடல்நலம் கெடுகிறது.

‘பத்தியம்’ என்ற ஆரோக்கியப் பாதுக்காப்பு சூத்திரத்தை மருத்துவர்களே ஏளனம் செய்வதால் சமுதாயத்தில் நோயாளிகள் அதிகமாகியுள்ளனர். நோய்களை உருவாக்கும் மருந்துகளை மக்கள் எக்கச்சக்கமாக உபயோகிக்கின்றனர்.

‘முழுமையான உடல்நலப் பாதுக்காப்பு’ என்பதற்கு பதில் ‘நோய் அறிகுறிக்கு சிகிச்சை’ என்ற முறை பெருகிவருகிறது. ‘சமையலறை’ முதல் சிகிச்சை மையமாக இருந்த நிலைமை மாறி எல்லாவற்றுக்கும் மருத்துக் கடைகளை நாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொழில்துறைத் தேவைகளை முன்னிறுத்தும் மருத்துவ முறையால் உடல்நலம் பொருளாதாரப் பிரச்சனையாகி விட்டது. ஸ்டார் மருத்துவம், மருந்துக் கம்பெனிகள், அவற்றால் பெருகும் சுற்றுச்சூழல் மாசு… என்று ஒரு விஷ வளையத்தில் உலகம் தள்ளாடுகிறது.

இனியாவது உடல்நலனைப் பேணும் பல்வேறு மருத்துவ முறைகளையும் சமன்வயம் செய்து அனைவருக்கும் குறைந்த விலையில் நலன் விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Source: ருஷிபீடம் அக்டோபர் 2018\


ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img