இங்க திருக்குறளை வேணும்னா திருத்தி எழுதுவாங்க! சீனாவில் குர்ஆனையும் பைபிளையும் திருத்துறானுங்க!

China muslim - 2026

மனிதர்களைத் திருத்துவதற்கு, அவர்களின் மத நூல்களைத் திருத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சீனா. சீன முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க அவர்களது மத நூலைத் திருத்தி எழுதினால் போதும் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது சீனா.

சீனாவில் மதக் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது என்று சர்வதேச நாடுகளும் மனித உரிமை ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இப்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பியுள்ளது.

அதாவது பைபிள் குரான் இரண்டையும் திருத்தி எழுத போகிறது சீனா. சீனாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். பிஷப்புகளை நியமிக்கும் நடைமுறைக்கு மாறாக சீன அரசு கொடுக்கும் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்ற நடைமுறையை சீனா உருவாக்கியுள்ளது.

சீனாவின் மாண்டரின் மொழியைத்தான் உய்குர் முஸ்லிம்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் மசூதிகளில் குவிமாடங்கள் இடிக்கப்பட்டு சீனாவின் கட்டடப் பாணியில் பகோடா வடிவ கோபுரங்களை அமைக்கப்பட்ட மசூதிகள் ஆக மாற்றி வருகின்றனர். மசூதிகளில் சீன தேசிய கொடி பறக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

எவ்வளவு நீளத்திற்கு முஸ்லிம்கள் தாடி வளர்க்கலாம் என்பதையும் சீன அரசு தான் தீர்மானிக்கிறது. 10 லட்சம் உய்குர் முஸ்லிம்களை வதை முகாம்களில் வைத்து கடின உழைப்புக்கு ஆளாகி வருவதாக சான்றுகளுடன் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதை சீன மறுத்து வருகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

உய்குர் முஸ்லிம்களுக்கு கல்வி மையம் தான் நடத்தப்படுகிறது என்று சீனா கூறுகிறது. இப்போது பைபிள் குரான் இரண்டையும் மொழிபெயர்த்து சோசலிச கருத்துக்கு மாறுபட்ட பகுதிகளை நீக்கிவிட்டு இன்றைய காலத்திற்கேற்ற சோஷலிச விழுமியங்களுடன் திருத்தி எழுத தீர்மானித்துள்ளது சீனா!

இதற்காக மத நம்பிக்கையுள்ள சிலருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 16 பேர் கொண்ட குழுவை சீன அரசு நியமித்துள்ளது. பைபிள் அல்லது குர்ஆனில் உள்ள சில பகுதிகளில் சில பகுதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதி தணிக்கையில் வெட்டப்படும் அல்லது திருத்தி எழுதப்படும்.

முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்று மேலைநாடுகள் கூச்சல் போட்டாலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories