கொரோனா: பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம்
- 2026

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சென்னை முதலிடத்திலும், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்து வந்த இரண்டு ஊழியர்களுக்கு, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதனால், மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்துக்கு குறிப்பாக லைப் ஸ்டைல் கடைக்கு சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இரு நாட்களுக்கு முன்னர், பீனிக்ஸ் மாலுக்கு சென்று திரும்பிய சவுகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஐந்தாவது நபராக மாலுக்கு சென்ற செஞ்சியை சேர்ந்த நபருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.