பைக் ரேஸ்க்கு பெண் பலி! சென்னையில் சோகம்

உள்ளூர் செய்திகள் சென்னை

roadside bike ride in chennai - 2026

சென்னை:

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பைக் ரேஸ்க்கு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 6 இளைஞர்கள் பைக்கில் போட்டி போட்டு பைக் ரேஸ் சென்றுள்ளனர். அப்போது சாலையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மீது பைக் பலமாக மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட இரு பெண்களில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொரு பெண் மீரா (55) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் முறிவு ஏற்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிவேகமாக பைக் ஓட்டி, பைக் ரேஸில் ஈடுபட்ட பிரபு, முகமது இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் அடையாறு போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தினர். போலீசார் பைக் ரேஸ் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். அதையும் மீறி இளைஞர்கள் பைக் ரேஸ்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக மெரினா கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி செய்வோர், அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். கடுமையான சட்டம் வந்தால் மட்டுமே இது நிறுத்தப் படும் என்று அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.