தேர்தல் 2019: தேனியில் ஓ.பி.எஸ்., மகன் முன்னிலை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

p ravindranath - 2026

தேனி மக்களவைத் தொகுதியில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் முன்னிலை பெற்றுள்ளார்.

#ElectionResults2019 #Verdict2019 #ModiAaRahaHai #தேர்தல் முடிவுகள் 2019 : முன்னிலை நிலவரம்!

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.

இந்நிலையில், தேனி மக்களவை தொகுதியில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் 1,722 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முன்னதாக, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் ரவீந்திரநாத் பெயர் எம்.பி., என்று பதியப் பட்டு, சர்ச்சை ஆனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.