தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை நிலவரம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

378231285810086 - 2026

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.

#ElectionResults2019 #Verdict2019 #ModiAaRahaHai #தேர்தல் முடிவுகள் 2019 : முன்னிலை நிலவரம்!

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் முன்னிலை

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலை

திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை

திருப்போருர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இதயவர்மன் முன்னிலை

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலை

நீலகிரி(தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் திமுக., வேட்பாளர் கனிமொழி முன்னிலை

தருமபுரி தொகுதியில் பாமக., வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.