கொரோனா: தடுப்பு மருந்து முதல் கட்ட வெற்றி! எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகம்!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
mgr medical university - 2026

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் , கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து வரும் நிலையில் தமிழகத்தின் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல் கட்ட வெற்றி அடைந்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.