
பாஷ்யம் அய்யங்கார் எழுதிய சரித்திர நாவல்கள் படிக்கும் பொழுது நம்மை அறியாமலே மூழ்கி விடுவோம் . பாஷ்யம் ஐயங்கார் – சாண்டில்யன் அவர்களின் உண்மை பெயர் . இன்று இவரின் பிறந்த தினம் .(10 -11 – 1910 )
நாவலாசிரியர்_சாண்டில்யன்_பிறந்ததினம்_இன்று
பாஷ்யம் அய்யங்கார் என இயற்பெயர்கொண்ட சாண்டில்யன் அவர் கள் 10.11.1910 ல் பிறந்தார் இந்திய சுதந்திர போராட்ட வீரர், புகழ்மிக்க நாவலாசிரியர்! தமிழ் இவர் கைவண்ணத்தில் விளையாடும் ,விரும்ப வைக்கும்!
இவர் இயற்றிய யவனராணி நாவல் கவர்ந்த நாவல், வார்த்தைகள் கோவைக்கு இவருக்கு நிகர் இவரே தான்.
ஜல தீபம், கன்னி மாடம், மன்னன் மகள், நாகதேவி, கடல் வேந்தன், மாதவியின் மனம், மலை வாசல், ராஜ்ய ஸ்ரீ, சித்தரஞ்சனி, மஞ்சள் ஆறு, ராஜமுத்திரை, மோகினி வனம், ராஜ பேரிகை, நீலரதி, நங்கூரம், விஜய மகாதேவி மூங்கில் கோட்டை என நாவல்களின் பட்டியல் மிகப் பெரிது!
காதல், காமம், சண்டை, படகு சவாரி, குதிரை ஏற்றம் சோழ சாம்ராஜ்ய அழகு என அத்துனையும் வாசிக்கும் போது நம் கண்முன்னே வந்து நிற்கும். கதையினை வாசிக்கும் நாம் கதா பாத்திரமாகவே மாறிவிடுவோம்!

கடல்புயலின் போது நாமே புயலில் சிக்கிக்கொள்வது போல் பயந்து விடுவோம்! டைபிரீஸ் உருவத்தை வீரத்தை கண்டும் இளஞ்செழியனின் வீரத்தை கண்முன் கண்டு புருவம் உயர்த்துவோம்!
யவனராணி, பூவழகி அழகை ரசிப்போம் அத்தனையும் கண்முன்னே கொண்டுவரும் வரிகள் அடடா வார்த்தைகள் அழகிய நர்த்தனமாடும்!
யவனராணி நாவலின் நான்கு பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்தால் இரண்டு பாகங்களையும் முழுவதுமாக அனுபவித்தபிறகு தான் புத்தகத்தை வைக்க தோன்றும்.
இவரது கடல்புறாவைப் பற்றியும் பெரிதும் பேசப்படுகிறது. வரலாற்று விழுமியங்களை நாம் இன்றளவும் அண்ணாரின் புத்தகங்களில் கண்டு ரசிக்கலாம்.
- வேதபுரி



