ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
ponnagannni - 2026

பொன்னாங்கண்ணிக்கீரை

பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.

இப்ப படிக்கறதல மட்டுமில்லாம செல் லேப்டாப் கம்ப்யூட்டர் டேப் என கண்ணுக்கு அதிகமான அழுத்தத்தையும் வேலையினையும் தருகின்றவற்றை அதிகம் காண்கின்றனர் இதனால் கண்ணிற்கு நலம் தரும் பொன்னாங்கண்ணி கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும் இந்த கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

பொன்னாங்கண்ணிக்கீரை – 1 கப்

வெங்காயம் – 1

ப.மிளகாய் – 1

சப்பாத்தி மாவு – 2 கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

sappathi ponkirai - 2026

பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், ப.மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தது திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.