
தேவையான பொருட்கள்:
- கவுனி அரிசி மாவு – 1 கப்,
- சர்க்கரை இல்லாத கோவா 1/2 கப், –
- கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
- நெய்-1/4 கப்,
- வெல்லம் – 1 கப்,
- முந்திரி, திராட்சை, பாதாம் – தேவைக்கேற்ப,
- பால் – 4 டேபிள்ஸ்பூன்.
கவுனி அரிசி அல்வா செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து
கொஞ்சம் நெய்விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்தெடுத்துத் தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் கவுனி அரிசி
மாவு, கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தண்ணீர் சேர்த்து வெல்லத்தைக் கரையவிடவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி தனியாக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வறுத்த கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, பால், சர்க்கரை சேர்க்காத வெல்லக்கரைசல், கோவாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
இடையிடையே நெய்விட்டு கிளறவும். கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறுங்கள், பிறகு அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி, திராட்சை, பாதாம் போன்றவற்றை தூவினால் சுவையான கவுனி அரிசி ஹல்வா தயார்.