December 5, 2025, 8:07 PM
26.7 C
Chennai

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! தொண்டை சதை, நரம்பு தளர்ச்சி..!

health tips 1
health tips 1

தொண்டைச் சதை கரைய…

கடுக்காய். சித்தரத்தை. திப்பிலி, சாதிக்காய் இவற்றைச் சமபங்கும். வால் மிளகு இரண்டு பங்கும் எடுத்துக் கொண்டு இவற்றை தனித்தனியே வறுத்து இடித்து கலந்து வைத்துக் கொண்டு குழந்தை களுக்கு இரண்டு சிட்டிகையளவும் பெரியவர்களுக்கு நான்கு சிட்டிகை அளவும் தேளில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்து வர மூன்று மாதங்களில் சதை கரைத்து விடும்.

திருநீற்றுப் பச்சை இலை. கற்பூரவல்லி இலை, மஞ்சள் கரிசலாங் கண்ணி இலை மூன்றும் வகைக்கு 100 கிராம் எடுத்து மிளகு, திப்பிலி வகைக்கு 15 கிராம் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலிலுலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை ஒரு மாத்திரை காய்ச்சிய பசும்பாலில் 40 நாள்கள் சாப்பிட டான்சில் தொண்டை ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகும்.

தொண்டைப் புண்ணா?

அன்னாசிப் பழச்சாற்றை வாயில் ஊற்றி மெதுமெதுவாகத் தொண்டையில் வைத்திருந்து விழுங்க வேண்டும் அல்லது பழச்சாறு தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தாலும் தொண்டைப் புண் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டால் சிறு கசப்புச் சுவையோடு வழவழப்பாக இருக்கும். இதனால் தொண்டைப்புண். வாய்ப்புண், கண்ணெரிச்சல். தேகக் காந்தல் குணமாகும்.

வெந்நீரில் நிறைய உப்புப் போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி, தொண்டைக் கமறல் குணமாகும்.

தொண்டை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதிமதுரப்பாலும் கற்கண்டும் புழுங்கலரிசியையும் வாயில் போட்டு அட கொண்டு அதன் சாற்றை விழுங்க நல்வ குணம் தெரியும்.

தொண்டையடைப்பான் நீங்க…

குப்பைமேனி இலையை கைப்பிடி அளவு எடுத்து கசக்கிச் சாறெடுத்து ஒரு தேக்கரண்டியளவு உள்ளுக்குக் கொடுக்க உடனே தொண்டை யடைப்பு நீங்கும்.

தோலில் சுருக்கமா?

இளவயது ஆண் – பெண்களுக்கு சில சமயம் உடலில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதைப் போக்க ஆகாரத்திற்குப் பின் மாம்பழம் சாப்பிட்டு வாருங்கள். அத்துடன் இரவில் படுக்கப் போகுமுன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வர தோல் சுருக்கம் நீங்கி வழுவழுப்படையும். உடலில் ஒரு வித வனப்பும் ஏற்படும்.

காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள முகத்திலுள்ள சுருக்கம் காணாமல் போகும்.

நரம்புகளுக்கு வலுவூட்ட

அரைக்கீரையையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கூட்டு சமைத்து சாதத்தில் தாராளமாய்ப் போட்டுக் கொண்டு நெய் சேர்த்துச் சுடச்சுடச் சாப்பிட நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.

முருங்கைக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். முருங்கைக் காயையும் பூ. முருங்கை ஈர்க்கு இவற்றைக் கொண்டு ரசம். சூப்பு வைத்துச் சாப்பிட நரம்புகளுக்கு வலு கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கு முருங்கை ஒரு கை கண்ட மருந்தாகும்.

கருவேலன் பிசினை நன்கு உலர்த்தி அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொண்டு நாள்தோறும் அரைத் தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சுரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட நரம்புகளுக்கு நல்ல வலுவும் மூளைக்கு குளிர்ச்சியும் இருதயத்துக்கு பலமும் கிடைக்கும்.

விளாமரத்துப் பிசினை சும்பாலில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து கொட்டைப் பாக்களவு இரவு படுக்கைக்குப் போகுமுன் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories