
தினை – தேன் லட்டு:
தேவையான பொருட்கள்:
தினை தலா 100 கிராம்
ரவை – 100 கிராம்
நெய் – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம் (பொடித்தது),
பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள்- சிறிது,
தேன் – 100 கிராம்.
செய்முறை:
கடைகளில் கிடைக்கும். தினைஅரிசி என்று கேட்டால் கிடைக்கும்
அவற்றை வாங்கி சுத்தம் செய்து கொண்டு, பின்பு வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை மிதமான சூட்டில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
அதே போல் ரவையையும் வறுக்க வேண்டும்.வறுத்த தினை அரிசி மற்றும் ரவை இரண்டும் ஆறியதும்,
ஏலக்காய் சேர்த்து நைசாக
அரைத்து கொள்ளவும்.
பின்பு சர்க்கரையையும் சேர்த்து கரைக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு முந்திரி பருப்பை ஒன்றிரண்டாக
உடைத்து, நெய் விட்டு வறுத்து சேர்த்து
கொள்ளவும்.
பின் நெய்யை நன்றாக சூடு செய்து
கலவையில் கொட்டி கலந்து, தேன் சேர்த்து
கலந்து சிறு, சிறு உருண்டையாகப் பிடித்தால் தினை மாவு லட்டு ரெடி.
இந்த தினை மாவு லட்டுவை உங்கள் தீபாவளி பண்டிகைக்கு
அனைவரிடமும் பாராட்டை பெறுங்கள்.