lion - 2026

கிர் தேசிய பூங்காவில் ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுக்குகொன்று சண்டையிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களின் ஒரே புகலிடமாக விளங்கும் கிர் தேசிய பூங்கா உள்ளது. இந்த தேசிய பூங்காவை முழுவதும் ஆட்சி செய்து வரும் ஆசிய சிங்கங்களை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு அங்கு சென்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஜூபின் ஆஷாரா ஒரு அரிய வகை காட்சியை படமாக்கியுள்ளார். 22 வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் சாலையின் குறுக்கே ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் காட்சிகள் காட்டுகின்றன.

அதில் அளவில் பெரியதாகவும் அரசனாகவும் விளங்கும் ஆண் சிங்கம், பெண் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குவதும் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரிய காட்சியை அந்த புகைப்பட கலைஞர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்த சண்டையை பார்த்து சிலர் வியப்பாக கமெண்டுகளை பதிவிட்டிருந்தாலும், பலர் இது தினம்தோறும் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையை ஒத்துள்ளதாக கேலியாக கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending