
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த பத்து நாட்களாக மூச்சு தினறால் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 62.
திமுக.,வைச் சேர்ந்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொராணா வைரஸ் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். கொராணோ வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் இவர்.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று, மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜெ.அன்பழகனுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெ.அன்பழகன் உடல்நிலை மோசமானதால் 3ஆம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், அவருக்கு 80% க்கும் அதிகமான ஆக்சிஜன் வழங்கப் பட்டு, செயற்கை சுவாச முறையிலேயே அவர் இருப்பதாகவும், பின்னர் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு, ஆக்சிஜன் வழங்கல் 40% என்ற அளவில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டது.
இரு தினங்கள் முன் மீண்டும் மருத்துவமனை வெளியிட்ட தகவலில், மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்ததாகவும், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலை ஜெ.அன்பழகன் காலமானதாக தகவல் வெளியானது.