
தனது பிறந்த நாளிலேயே மறைந்துள்ளார் திமுக., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்.
கொரானோ தொற்று காரணமாக கடந்த 2-ஆம் தேதி ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை 8.05 மணி அளவில் உயிரிழந்தார்.
1958 ஜூன் 10- ஆம் தேதி பிறந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 வது பிறந்தநாள். அவருக்கு ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தது. திமுகவில் கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜெ அன்பழகன்.
மேலும், சென்னை மேற்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராகவும் இருந்தார். கடந்த ஒரு வாரமாக, ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்தும், கொரோனா தாக்கம் குறித்தும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
3 மாதத்துக்கு முன்பே சட்டமன்றத்தில் கொரோனா குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது வயது மூப்பின் காரணமாக, வேறு உடல் நலக் கோளாறுகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று துரை முருகனுக்கு பதில் அளித்த தமிழக முதல்வர், இப்போது என்ன சொல்ல போகிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம், மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மை உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன்.
என் அன்பு சகோதரா அன்பழகா இனி எப்போது கண்போம் உன்னை ! என்னை நானே தேற்றிகொள்ளமால் தேம்பி அழும் நிலையில் என்று திமுக தலைவர் மு.க.அறிக்கை உருக்கமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஜெ.அன்பழகன் உயிரிழந்ததன் மூலம், தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3, ஆக உயர்ந்துள்ளது
தமிழக சட்டப்பேரவையில் தற்போது
அதிமுக – 124
திமுக – 97
காங்கிரஸ் – 7
இந்திய யூனியன் முஸ்லீன் லீக் – 1
சுயேட்சை – 1
நியமன உறுப்பினர் – 1
சபாநாயகர் – 1
காலி இடம் – 3
ராதாமணி, கே பி பி சாமி,
குடியாத்தம் காத்தவராயன், தற்போது ஜெ அன்பழகன் என கடந்த ஓராண்டில் 4, எம்எல்ஏக்களை இழந்திருக்கிறது திமுக!
கட்சிப் பணிகளில் திறமை… 3 முறை எம்எல்ஏ பதவி.. ஜெ.அன்பழகன் கடந்து வந்த பாதை..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். திமுகவில்3 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஜெ.அன்பழகன்.
பழக்கடை ஜெயராமனின் மகன்தான் ஜெ.அன்பழகன். ஜெயராமன், திமுக மீது அதிக பற்று கொண்டவர். அவர் வழியில் அன்பழகனுக்கும் திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அன்பழகனை பொருத்தவரை தொகுதி செயலாளராக இருந்து படிப்படியாக முன்னுக்கு வந்தவர். சைதை சித்துவுக்கு பிறகு சென்னையில் திமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். அதன்பின் சென்னை திமுகவின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பை வகித்து வந்தார்
2001-ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2006 ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார். தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தொடர்ந்தார். திமுக கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றியவர்.கட்சிப் பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு பெறுவதில் வல்லவர் ஜெ. அன்பழகன்.
அன்பு பிக்சர்ஸ் பெயரில் ஜெயம் ரவியின் ஆதிபகவன் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். சந்தீப் கிஷன் நடித்த ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தை விநியோகம் செய்துள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் இன்றுதான் 62-வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
1976, ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது தனது தந்தை பழக்கடை ஜெயராமனுக்கு பதிலாக 18 வயதில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெ.அன்பழகன்



