
சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, இன்று காலை காலமான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணீ தொகுதி திமுக., சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கடைசியாக போட்ட் டிவீட் இப்போது கவனம் பெற்றுள்ளது.
திராவிடக் கட்சிகளில் சவாரி செய்தவர் ஜெ.அன்பழகன். அவர் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இயங்கி வந்தார். அவ்வப்போது தொகுதிக்குச் சென்று உதவிகள் செய்ததையும் விசிட் அடித்ததையும், கட்சியினருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் போட்டு வருவார். மேலும் அவ்வப்போதைய அரசியல் சூடுகளுக்கு ஏற்ப கருத்துகளையும் தெரிவித்து வருவார்.
கடைசியாக அவர் ஜூன் 2ஆம் தேதி ஒரு டிவீட் போட்டிருக்கிறார்.. அதில், தமிழகத்தின் சிற்பி… என்று கருணாநிதி படத்தைப் பதிவு செய்து, கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாட ஆயத்தமாகியுள்ளார். ஆனால் அதே ஜூன் 2 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுவிட்டார்.
ஜெ.அன்பழகன் இறுதியாக காணொளிக் காட்சி மூலமான, சென்னை மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் மே 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலந்து கொண்டுள்ளார்., அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கடித முகப்புடன் வெளியிட்ட தகவலில், ஜூன் 3 அன்று கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்து அனைத்து தெருக்களிலும் வட்டங்களிலும் அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றுவது என்றும் சென்னை மேற்கு மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்
கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி 50 ஆயிரம் பேருக்கு ஸ்டாலின் மூலம், வைரஸ் பாதிப்பில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது என்றும், 20 ஆயிரம் இளைஞர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்
கொரோனா அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து முகக்கவசம் சனிடைசர் சோப்பு கையுறை அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் ஆகியவற்றுடன் நிதி உதவியும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அவர் உயிரிழந்தது கட்சியினர் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது!