கொரோனா ஊரடங்கால் பாதித்த நோயாளிகளுக்காக.. ரூ.51 லட்சம் வழங்கிய ஆளுநர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
governor banwarilal purohit
governor banwarilal purohit

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, ரூ.51 லட்சம் அளித்துள்ளார் தமிழக ஆளுநர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் வழங்கியுள்ளார்.

தன் விருப்ப நிதியிலிருந்து அவர் இந்தத் தொகையை ஒதுக்கியுள்ளார். அதன்படி ஏப்., 1ம் தேதி ரூ. 11 லட்சம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று இரண்டாம் கட்டமாக, ரூ. 40 லட்சம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகப் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, உதவி செய்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.