கொரோனா: ஒரே நாளில் 15 குழந்தைகள் பாதிப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
baby
baby

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸால் லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 மாதங்களாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெரியவர்கள்,சிறியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் தாக்கி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பெருந்தொற்றாக அறிவித்துள்ள அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா வைரஸால் அதிக அளவில் பாதித்துள்ள சென்னையில் ஓரளவு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் சென்னையில் 3500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதால், அடுத்த 5-6 நாட்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகத் தான் இருக்கும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில், பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், 11 ஆண் குழந்தைகள்மற்றும் 4 பெண் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.