சின்னத்திரைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி! முதல்வர்!

உள்ளூர் செய்திகள் சினிமா சென்னை தமிழகம்
cm 1
file pic

நாளை முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில், நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என அதிகபட்சமாக 60 பேர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.