ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி தந்த செல்.. ஆபாச படம் பார்த்து 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை
vankodumai

கோவை சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி அத்தை மற்றும் தந்தையின் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு வாழ்ந்து வந்துள்ளார் அந்த சிறுமியின் அப்பாவும் அத்தையும் கூலி வேலைக்காக சென்று விடுவார்கள். கீழே உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று டி.வி பார்ப்பதை சிறுமி வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வீட்டில் 10ம் வகுப்பு சிறுவன் ஒருவன் இருக்கிறான் அவனது பெற்றோர்களும் வேலைக்கு சென்று விடுவர். இந்நிலையில் சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கி கொடுத்துள்ளனர்.

ஆனால் ஆன்லைன் வகுப்பை விடுத்து ஆபாச படங்களை அந்த சிறுவன் பார்த்து வந்துள்ளான். அந்த சிறுவனுடன் 11ம் வகுப்பு சிறுவன் ஒருவனும் ஆபாச படம் பார்க்க வீட்டிற்கு வருவான்.
சம்பவம் நடந்த கடந்த மே 20ம் தேதி வழக்கம் போல டி.வி பார்க்க வந்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்துள்ளனர். அந்த இரண்டு சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்ந்து வந்த நிலையில் மேலும் ஒரு 11ம் வகுப்பு சிறுவனை அழைத்து சிறுமியை மூவரும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். திடீரென்று சிறுமிக்கு ஒரு நாள் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

சிறுமியை மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து சிறுமியை விசாரித்த போது நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் புகாரினை பெற்ற கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் 2 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள மூன்றாவது சிறுவனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.