வாராஹி நவராத்திரி… இன்று தொடக்கம்!

Published:

varahi amman
varahi amman

இன்று திங்கட்கிழமை ஜூன் 22. இன்று முதல் ஆஷாட மாதம் பிறக்கிறது. வாராகி நவராத்திரி தொடங்குகிறது.

ஒரு வருடத்தில் முக்கியமாக இரண்டு நவராத்திரிகள் கூறியுள்ளார்கள். வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி. இவையன்றி ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் இன்னும் இரண்டு அதிகமான நவராத்திரிகள் தென்படுகின்றன. அவற்றில் ஒன்று ஆஷாட மாதம் பாட்யமி முதல் வரும் நவராத்திரி. இதற்கு வாராகி நவராத்திரி என்று பெயர்.

யக்ஞ வராக ரூபத்தில் பூமியை காத்தருளிய தெய்வசக்திக்கு குறியீடாக, பூமியை ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கான வழிபாட்டு தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி.

varahi
varahi

இந்த சக்தி தொடர்புடைய மந்திரங்களுக்கு குரு உபதேசம் போன்றவை தேவை. ஆனால் தாயாக வணங்குபவர்கள் அவளுடைய ஸ்தோத்திரங்கள், ஸ்ரீவாராஹி தேவ்யை நமஹ போன்ற நாமங்களோடு இந்த ஒன்பது நாட்களும் பூஜை செய்யலாம்.
பிற தேவதைகளை பூஜை செய்வதற்கு கடைபிடிக்கும் சாதாரண நியமங்கள் போதுமானது.

இச்சாசக்தி ஞானசக்தி கிரியாசக்திகளில் கிரியா சக்திக்குக் குறியீடு வாராஹி தேவி. இச்சா, ஞான சக்திகள் க்ரியா சக்தியில் சேர்த்து விடுவதுபோல் ஷ்யாமளா, லலிதா தேவி வடிவங்கள் ஒன்று சேர்ந்த ரூபம் ஶ்ரீவாராஹிதேவி.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

கிராத வாராகி, பைரவி, ஸ்வப்ன வாராகி இவ்விதமாக பல உருவங்களில் பல பெயர்களோடு அருள் வழங்கும் தாய் இவள்.

இந்த ஒன்பது நாட்களும் வாராகி தேவியை மகிழ்விக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், லலிதா அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்து தேவியின் அருளை பெறமுடியும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img